புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்சி பேதங்களை மறந்து ஒரே மேடையில் தோன்றிய முன்னாள் ஜனாதிபதிகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்சி பேதங்களை மறந்து ஒரே மேடையில் தோன்றிய முன்னாள் ஜனாதிபதிகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்சி பேதங்களை மறந்து ஒரே மேடையில் தோன்றிய முன்னாள் ஜனாதிபதிகள்

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2017 | 4:11 pm

அமெரிக்காவை இந்த வருடம் தாக்கிய ஹார்வே, இர்மா, மரியா புயல்களால் அங்கு உயிரிழப்புகளும் பாரிய பொருட்சேதங்களும் ஏற்பட்டன.

புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜார்ஜ் W. புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் H.W. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகிய 5 பேரும் மேடையில் ஒன்றாகத் தோன்றினர்.

இவர்களில் ஜார்ஜ் W. புஷ், ஜார்ஜ் H.W. புஷ் ஆகிய இருவரும் குடியரசுக் கட்சியினர். மற்ற 3 பேரும் ஜனநாயகக் கட்சியினர். பொது நலனுக்காக அவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்தது மக்களைக் கவர்ந்தது.

‘One America Appeal’ என்ற இந்த இசை நிகழ்ச்சி மூலம் இதுவரை 31 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.

5 முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்கவில்லை. இருந்தபோதும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தன் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்.

 

59ec23d8991d6.image former-presidents


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்