ஜப்பான் பொதுத் தேர்தலில் ஷின்சோ அ​பே மீண்டும் தனது வெற்றியை உறுதி செய்தார்

ஜப்பான் பொதுத் தேர்தலில் ஷின்சோ அ​பே மீண்டும் தனது வெற்றியை உறுதி செய்தார்

ஜப்பான் பொதுத் தேர்தலில் ஷின்சோ அ​பே மீண்டும் தனது வெற்றியை உறுதி செய்தார்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2017 | 6:35 am

ஜப்பான் பொதுத் தேர்தலில் ஷின்சோ அபே மீண்டும் பிரதமராகி, தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

பொதுத் தேர்தலில், ஷின்சோ அபேயின் லிபரல் ஜனநாயகக் கட்சி 312 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அபார வெற்றியடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்கமைய ஜப்பானில், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஷின்சோ அபே தலைமையிலான ஆட்சி முன்னெடுக்கப்படவுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமராக பதவியேற்ற அபே அந்நாட்டு வரலாற்றில் அதிகூடிய வருடங்கள் பிரதமராகியவர் எனவும் பதிவாகியுள்ளார்.

வடகொரியாவின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான ஆணையை மக்கள் தனக்கு வழங்கியுள்ளதாக அபே தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமரால், நாடு எதிர்கொள்ளும் தேசிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கடந்த மாதம் 25 ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்