அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்காதிருக்க தீர்மானம்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்காதிருக்க தீர்மானம்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்காதிருக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2017 | 1:40 pm

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்காதிருப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

தேவை ஏற்படின் எதிர்காலத்தில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அறிவிப்பதற்கும் வாழ்க்கை செலவு குழு தீர்மானித்துள்ளது.

அரிசியின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என அரிசி விற்பனையார்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி போதுமான அளவு சந்தையில் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் உள்நாட்டு சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அரிசி விலை அதிகரிப்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்