நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 4 பிரதேச சபைகளை நிறுவத் தீர்மானம்

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 4 பிரதேச சபைகளை நிறுவத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2017 | 3:53 pm

திருத்தப்பட்ட புதிய உள்ளூராட்சி சட்டமூலத்திற்கு அமைய, நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 4 பிரதேச சபைகளை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், அம்பகமுவ பிரதேச சபை – அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா ஆகிய மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச சபை – நுவரெலியா, அக்கரபத்தனை, மகொட்டகல ஆகிய மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் சட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதன்படி, திருத்தப்பட்ட புதிய உள்ளூராட்சி சட்டமூலத்திற்கு அமைய, நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக 6 பிரதேச சபைகளை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படவுள்ளது.

மத்திய மாகாண பிரதம செயலாளரின் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (17) இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்