ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2017 | 3:38 pm

தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர்.

தீபாவளி தினத்தன்று இந்து பக்தர்களால் ஏற்றப்படும் தீப ஔியானது, அவர்களது உள்ளங்களில் பிரகாசத்தினை ஏற்படுத்துவதைப் போன்று, நாட்டின் அனைத்து மக்களின் இதயங்களிலும் ஔியேற்றி, சகல இனங்களையும் ஒன்றிணைக்கும் ஔிப்பாலமாக அமைய வேண்டும் என்பதே தமது பிரார்த்தனை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையர் என்ற வகையில் இன, மத, சாதி என பிரிவடைந்து காணப்படுவதற்கு பதிலாக சகவாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆழமான பிணைப்பு மிக்க புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட இவ்வாறான கலாசார விழாக்கள் பெரும் ஆதாரமாக அமையும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தீபத்திருநாளானது அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மானிடம் கோலோச்சி, சமாதானமும் தோற்றம் பெற்று மனிதன் தனது தனிப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவன்றி நன்மை மீதும் கவனஞ்
செலுத்த வேண்டும் என்பதே தீபாவளி புகட்டும் பாடமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டான போதிலும் கூட தன்னுடைய உள்ளத்தின் ஞான ஔியை இல்லாமற்செய்து விடாமல் ஐக்கியமாக சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்து பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான, அமைதியான தீபாவளிப் பண்டிகையாக அமையட்டும் என வாழ்த்துவதாக பிரதமர் ரணில்
விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை, வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றால் துன்ப, துயரங்களை அனுபவித்து வந்த மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டு சம அந்தஸ்துடன் கூடிய உரிமைகளுடன் வாழும் வகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ இந்த தீபாவளித் திருநாள் வகைசெய்திட வேண்டுமெனவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி, இந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த இனிய நன்னாளில் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவர் சீலரத்ன தேரர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்