ஏறாவூரில் தாயும் மகனும் கொலை

ஏறாவூரில் தாயும் மகனும் கொலை

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2017 | 4:23 pm

மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பகுதியில் 26 வயதான தாய் மற்றும் 11 வயதான மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (17) இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் வௌிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்