ஏமாற்றும் முயற்சி இடம்பெறுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

ஏமாற்றும் முயற்சி இடம்பெறுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2017 | 7:30 pm

மக்களின் தலைவிதியை அழிக்கும் வகையிலான அரசியலமைப்பை வழங்கி ஏமாற்றும் முயற்சி இடம்பெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

போரினால் தமிழ் மக்களின் அரசியல் தோற்கவில்லை எனவும் தற்போது தான் தோற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

”எப்போது எங்கள் அடிப்படை உரிமைகளை நாங்கள் கைவிடுகின்றோமோ அப்போது தான் நாங்கள் தோற்றுவிட்ட இனமாக மாறுவோம்,” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்