இரண்டு கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இருவர் வத்தளையில் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இருவர் வத்தளையில் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இருவர் வத்தளையில் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2017 | 3:45 pm

இரண்டு கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 137 கிலோ 228 கிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மற்றும் மட்டக்குளிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்