கொடுப்பனவுகளை வழங்காத கல்குடா மதுபான தொழிற்சாலையை நிர்மாணிக்கும் நிறுவனம்

கொடுப்பனவுகளை வழங்காத கல்குடா மதுபான தொழிற்சாலையை நிர்மாணிக்கும் நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

17 Oct, 2017 | 8:57 pm

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் தமக்கான கொடுப்பனவுகளை இன்னும் செலுத்தவில்லையெனத் தெரிவித்து ஊழியர்கள் சிலர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த மூன்று மாதங்களாக தமக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து சுமார் 80 -இற்கும் மேற்பட்டவர்கள் கல்குடா தொழிற்சாலைக்கு செல்லும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கல்குடா எத்தனோல் உற்பத்தி தொழிற்சாலையில் இந்தியாவைச் சேர்ந்த வேலையாட்கள் பணியாற்றுவது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி பிரதான செய்தியூடாக அறிக்கையிட்டிருந்தது.

தொழிற்சாலையில் பணியாற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்களை இன்று ஆர்ப்பாட்டத்தின் போது அவதானிக்க முடிந்தது.

கல்குடா மதுபானத் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஏற்படும் சமூக ரீதியான பிரச்சினைகள் குறித்து புத்திஜீவிகள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் தொடர்ச்சியாக அவதானித்து வந்தது.

எத்தனோல் உற்பத்தி நிலையம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளர் உட்பட இரண்டு ஊடகவியலாளர்கள் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்