ஷலீல முணசிங்கவின் வீட்டிற்கு மின்சாரம் பெற்றுக்கொண்டதில் முறைகேடு: வழக்கு விசாரிக்கப்பட்டது

ஷலீல முணசிங்கவின் வீட்டிற்கு மின்சாரம் பெற்றுக்கொண்டதில் முறைகேடு: வழக்கு விசாரிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 7:35 pm

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலீல முணசிங்கவிற்கு சொந்தமான, இராஜகிரியவில் உள்ள வீட்டில் மின் மானியை மாற்றி முறையற்ற விதத்தில் மின்சாரம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கை மின்சார சபை தாக்கல் செய்துள்ள இந்த வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறும் என இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.

கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் இந்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சாட்சியாளர்கள் குறித்த தினத்தில் ஆஜராக வேண்டும் என அறிவித்தல் விடுக்குமாறு மேலதிக நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

சந்தேகநபரான ஷலீல முணசிங்க அன்றைய தினம் வரை விளக்கமறியலில் இருந்தால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேலதிக நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

ஷலீல முணசிங்க தாய்வான் வங்கியொன்றில் இருந்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்