நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 6:39 pm

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று யாழ். நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சட்டத்தரணிகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இன்றும் மன்றுக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி நல்லூர் பின் வீதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்