தடைகளைத் தாண்டி வௌியாகிறது மெர்சல்

தடைகளைத் தாண்டி வௌியாகிறது மெர்சல்

தடைகளைத் தாண்டி வௌியாகிறது மெர்சல்

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 4:08 pm

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் எதிர்வரும் புதன்கிழமை திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் புறா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு விலங்குகள் நலவாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி படம் வௌியாவதில் சிக்கல் நிலவியது.

இன்று சென்னை வந்த விலங்குகள் நலவாரிய குழுவினர், ‘மெர்சல்’ படத்தை பார்த்துவிட்டு, புறா சம்மந்தப்பட்ட காட்சிகள் கிராஃபிக்ஸ் என உறுதிப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும், படத்தில் இடம்பெறும் ஒரு சில காட்சிகளை நீக்க சொன்னதாகக் கூறப்படுகிறது.

தற்போது விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதால், தீபாவளி தினத்தில் ‘மெர்சல்’ படம் திட்டமிட்டப்படி வெளியாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்