சோமாலியா குண்டுத்தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 276 ஆக உயர்வு

சோமாலியா குண்டுத்தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 276 ஆக உயர்வு

சோமாலியா குண்டுத்தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 276 ஆக உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 3:47 pm

சோமாலியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் லொறியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பிக்கொண்டு வந்த பயங்கரவாதிகள், அதனை மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் வெடிக்கச் செய்தனர்.

பல்வேறு முக்கிய அமைச்சரவை அலுவலகங்கள் அமைந்த அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 189 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்