காணாமல் ஆக்கப்பட்ட கணவரையும் மகனையும் தேடித்தருமாறு அறவழியில் போராடிய பெண் உயிரிழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட கணவரையும் மகனையும் தேடித்தருமாறு அறவழியில் போராடிய பெண் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 8:11 pm

காணாமல் ஆக்கப்பட்ட கணவரையும் மகனையும் இழந்து தவித்து, உயர் இரத்த அழுத்தத்தால் உயிரிழந்த பெண்ணொருவரின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கணவரையும் மகனையும் தேடித்தருமாறு கோரி மன்னாரைச் சேர்ந்த மேரி அசுந்தா பீரிஸ் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் (14) உயிரிழந்தார்.

மன்னார் – முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அன்னாரின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரின் கணவர் சூசையப்பு ஸ்ரன்லி லியோனும் மகன் ரொஷான் லியோனும் 2008ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி கிளிநொச்சியில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 50 வயதான ஈஸ்வரன் உருத்திராதேவி, கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிக் காத்திருந்த பலர் இவ்வாறு இயற்கை எய்தி வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்