கடந்த முறை தீபாவளிக்குக் கூறியதையே இம்முறையும் கூறிய சம்பந்தன்

கடந்த முறை தீபாவளிக்குக் கூறியதையே இம்முறையும் கூறிய சம்பந்தன்

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 9:34 pm

நாட்டிலுள்ள சகல இன மக்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்கும் பயணம் அடுத்த முறை தீபாவளியின்போது வெற்றிபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி விழாவில் நேற்று (15) மாலை கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த தீபாவளி பண்டிகையின்போதும் எதிர்க்கட்சித் தலைவர் இதனையொத்த கருத்தொன்றை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்