உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2017 | 9:08 am

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரிசயல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று பேரில் இருவருக்கு சிறைச்சாலை வைத்தியர்களால் சேலைன் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

மூன்று அரசியல் கைதிகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தொடர் கண்காணிப்பிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் 22 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டில் வெவ்வேறு காலப்பகுதியில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுறை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் விசேட மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றுமாறு வலியுறுத்தி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்