இலங்கைக்கு 220 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

இலங்கைக்கு 220 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

இலங்கைக்கு 220 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 8:45 pm

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 220 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

அபுதாபி சேக் ஷாயித் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு பக்கர் ஷமான் மற்றும் அஹமட் செசாத் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.

பாகிஸ்தான் அணி 79 ஓட்டங்களுக்கு முதல் 05 விக்கெட்டுக்களையும் இழந்தது.

என்றாலும், சவாலாக துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தன்னுடைய 7 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய சடாப் கான் சர்வதேச ஒருநாள் அரங்கில் தன்னுடைய கன்னி அரைச்சதத்தை எட்டினார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களைப் பெற்றது.

லஹிரு கமகே 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்