தொடரும் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

தொடரும் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2017 | 8:07 pm

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.

கைதிகள் மூவரும் இன்று 20 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில் வெவ்வேறு காலப்பகுதியில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுறை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, நேற்று வடமாகாணம் தழுவிய ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்