ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மன்னார் விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மன்னார் விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2017 | 8:18 pm

ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறீவ் இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழு கேட்போர் கூடத்தில் காணாமற் போனோரின் உறவினர்களுக்கான அமைப்பினரை அவர் சந்தித்துள்ளார்.

அத்துடன் காணாமற் போனோர் தொடர்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் மன்னார் மாந்தை புதைகுழி வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகளையும் ஐ.நா விசேட பிரதிநிதி சந்தித்து கலந்துரையாடியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி, மன்னார் மாவட்டத்தின் மகளிர் அமைப்புகள் ஒன்றிய அலுவலகத்திற்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் மன்னார் மாந்தை பகுதியில் மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி சென்றிருந்தார்.

எவ்வாறாயினும் அவர் வாகனத்திலிருந்து இறங்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறீவ், வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து வருகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்