அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார் ஜனாதிபதி

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2017 | 7:15 pm

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துள்ளார்.

தேசிய தமிழ் மொழி தின விருது வழங்கும் விழா யாழ் இந்துக் கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வருகைதந்த சந்தர்ப்பத்தில் கல்லூரிக்கு அருகே அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அரசியல்வாதிகள், காணாமற்போனோரின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கருப்புப்பட்டி அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பதாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று ஜனாதிபதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

பின்னர் தேசிய தமிழ் மொழி தின விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

யாழ். இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இதேவேளை, கிளிநொச்சியில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்களையும் சந்தித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்