மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்  19 ஆவது நாளாக தொடர்கிறது

மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்  19 ஆவது நாளாக தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 9:19 pm

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

கைதிகள் மூவரும் இன்று 19 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதிகள் நேற்று (12) சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

2012 ஆம் ஆண்டு வெவ்வேறு காலப்பகுதியில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுறை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்