நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட யுக்ரைன் பிரஜை தப்பியோட முயற்சி

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட யுக்ரைன் பிரஜை தப்பியோட முயற்சி

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 8:33 pm

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் இன்று தப்பிச்செல்ல முற்பட்டார்.

குறித்த கைதி தப்பியோடுவதைத் தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், மற்றுமொரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வௌியேறிய சந்தர்ப்பத்திலேயே யுக்ரைன் பிரஜை தப்பியோட முயற்சித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பின்னர் யுக்ரைன் பிரஜை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி ராஜகிரியவில் 7 வயதான ஜேசன் கிம் மற்றும் டேசி மனோஹா ஆகிய இருவரையும் கொலை செய்தமை, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை, விக்டோரியா கிம் என்பவரைக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், குறித்த யுக்ரைன் பிரஜைக்கும் அவரின் மனைவிக்கும் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்