ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 3:21 pm

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் குமார வெல்கம மற்றும் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் மகிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பதவிகளுக்கான இரண்டு புதிய அமைப்பாளர்களை ஜனாதிபதி நியமித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மத்துகம தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பிரியங்கனி அபேதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளராக மத்திய மாகாண சபை உறுப்பினர் எச். ஏ. ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியால் நேற்று (12) இரவு வழங்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்