வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 4:33 pm

வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த திங்கட்கிழமை (09) முதல் பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39 பேரைக் காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 317 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

34,000 வீடுகள் வரை சேதமாகியுள்ளதாகவும் சுமார் 22,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்து 80,000 விலங்குகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்