லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக நிஷங்க நாணயக்கார நியமனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக நிஷங்க நாணயக்கார நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 3:39 pm

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக நிஷங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம், அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை காப்புறுதி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் என்பதால் ஹேமக அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளராக நிலு விஜயதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளராக சாதி டாவுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் இணை முகாமைத்துவ பணிப்பாளர் பதவியை இரத்து செய்து, நிறைவேற்று பணிப்பாளர் பதவியை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்கு , பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்