மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் பேரணி கொழும்பில் இடம்பெற்றது

மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் பேரணி கொழும்பில் இடம்பெற்றது

மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் பேரணி கொழும்பில் இடம்பெற்றது

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 8:14 pm

மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பேரணி இன்று கொழும்பில் இடம்பெற்றது.

மலையக மக்கள் காணி உரிமை இயக்கம், காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த பேரணி இடம்பெற்றது.

காணி உரிமையை உறுதி செய்தல், பெருந்தோட்டத்துறையிலுள்ள அரச சொத்துக்களை விற்பனை செய்வதை உடன் நிறுத்துதல், தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கொள்ளுப்பிட்டியில் இருந்து அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு வரை இந்த பேரணி பயணித்தது.

அமைச்சர் கபீர் ஹாசிமின் வருகையை எதிர்பார்த்து பேரணியில் ஈடுபட்டவர்கள் காத்திருந்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் இல்லாத காரணத்தினால், அமைச்சின் செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, பேரணியாகச் சென்றிருந்தவர்கள் கையளித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்