பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: இலங்கையின் வெற்றி இலக்கு 293 ஓட்டங்களாக நிர்ணயம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: இலங்கையின் வெற்றி இலக்கு 293 ஓட்டங்களாக நிர்ணயம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: இலங்கையின் வெற்றி இலக்கு 293 ஓட்டங்களாக நிர்ணயம்

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 9:00 pm

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 293 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களைப் பெற்றது.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

முதல் விக்கெட் 11 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் பாபர் அசாம், பாகார் ஷமான் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது.

பகார் ஷமான் 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க பாபர் அசாம் சதமடித்தார்.

சொஹைப் மாலிக் 62 பந்துகளில் 81 ஓட்டங்களையும், மொஹமட் ஹாபிஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்