தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் ஹர்த்தால்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் ஹர்த்தால்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் ஹர்த்தால்

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 3:49 pm

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவிய ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வட மாகாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, வட மாகாணத்திலுள்ள அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் ஹர்த்தாலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர்.

இந்த பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாகவும், உள்ளூர் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்