ஐ.நா. வின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி யாழ்ப்பாணம் விஜயம்

ஐ.நா. வின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி யாழ்ப்பாணம் விஜயம்

ஐ.நா. வின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி யாழ்ப்பாணம் விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 10:09 pm

ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் யாழ். நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் பங்கேற்றிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸார் மற்றும் படையினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பதிலளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்