விருப்பு வாக்கு முறையை இல்லாமலாக்குவதற்கான சவாலை நாமே முதலில் பொறுப்பேற்றோம் – பசில் ராஜபக்ஸ

விருப்பு வாக்கு முறையை இல்லாமலாக்குவதற்கான சவாலை நாமே முதலில் பொறுப்பேற்றோம் – பசில் ராஜபக்ஸ

விருப்பு வாக்கு முறையை இல்லாமலாக்குவதற்கான சவாலை நாமே முதலில் பொறுப்பேற்றோம் – பசில் ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

12 Oct, 2017 | 9:39 pm

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது பசில் ராஜபக்ஸ தெரிவித்ததாவது,

[quote]பெண்களின் பிரிதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமற்செய்யப்பட்டுள்ள போதிலும், 25 வீதத்தை இளைஞர்களுக்காக ஒதுக்குவதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது. அதனால் தகுதியானவர்களைத் தெரிவு செய்வது முக்கியமாகும். புதிய தேர்தல் முறையெனக் கூற முடியும். எனினும், தொகுதிவாரி முறை ஏற்கனவே காணப்பட்டவொன்றாகும். நீண்ட காலத்திற்கு பின்னர் கிராமங்களில் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்கள் உருவாக்கப்படவுள்ளனர். எவர் எம்மீது தவறான கருத்துக்களை முன்வைத்த போதிலும், விருப்பு வாக்கு முறையை இல்லாமல் செய்வதற்கான சவாலை, மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கக் காலப்பகுதியில் நாமே முதலில் பொறுப்பேற்றோம். [/quote]

ஊடகம் முன்வைக்கும் விமர்சனங்கள் தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பசில் ராஜபக்ஸ, தாம் அனைத்து ஊடகங்களுக்கும் மதிப்பளிப்பதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் அதற்கு பதில் அளிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்