புத்தளம் – சியம்பலாவ வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு

புத்தளம் – சியம்பலாவ வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு

புத்தளம் – சியம்பலாவ வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2017 | 10:17 am

புத்தளம் – கருவலகஸ்வெவ, சியம்பலாவ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வனப்பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த இருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் 18 மற்றும் 31 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்