லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர், ஜே.சி.நம்முனி ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர், ஜே.சி.நம்முனி ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2017 | 11:18 am

தாய்வானில் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து 1.1 மில்லியன் டொலர் இலங்கை வங்கியின் கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க மற்றும் ஜே.சி.நம்முனி ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்களிடம் சிறைச்சாலையில் மேலதிக விசாரணைகளை நடத்தமுடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் அறிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் பிரித்தானிய பிரஜா உரிமை உள்ளவர்கள் என்பதும் ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.

ஷலீல முனசிங்க பிரதானிய பிரஜை எனவும் அவரது இலங்கை வீசா டிசம்பர் மாதத்துடன் காலாவதியாவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

ஜே.சி.நம்முனியும் பிரித்தானியா மற்றும் இலங்கையில் இட்டை குடியுரிமை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்