மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2017 | 9:57 am

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான மலிக் சமரவிக்ரம முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு நேற்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தவிர அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹசீமையும் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முறிகள் விநியோகத்திற்கு முன்னதாக மத்திய வங்கியில் நடைபெற்ற கூட்டமொன்றில், முறிகள் விநியோகத்துன் தொடர்புபடாத இவ்விருவரும் பங்கேற்றிருந்தமை ஆணைக்குழுவில் உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்