பிரபாகரனின் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவிப்பு

பிரபாகரனின் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவிப்பு

பிரபாகரனின் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

11 Oct, 2017 | 4:43 pm

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இடம்பெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரங்களில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகின்றார்.

வதோதராவில் இடம்பெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே ராகுல் காந்தி இதனைக் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் கொள்கையை தமது குடும்பத்தினர் கடைப்பிடித்து வருவதாகவும் தனது தந்தையின் உயிரிழப்புடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு வருத்தமளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்