நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2017 | 8:09 am

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 மக்கள் பிரதிநிதிகளும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறாம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, டி.வி ச்சானக, பிரசன்ன ரணவீர மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, அஜித் பிரசன்ன ஆகியோரை, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்றிரவு 7.30 அளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்