டெல்லி, மும்பையில் பட்டாசுகள் வெடிக்கத் தடை

டெல்லி, மும்பையில் பட்டாசுகள் வெடிக்கத் தடை

டெல்லி, மும்பையில் பட்டாசுகள் வெடிக்கத் தடை

எழுத்தாளர் Bella Dalima

11 Oct, 2017 | 4:33 pm

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை டெல்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையிலும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி டெல்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போதும் அதற்குப் பின்னரான நாட்களிலும் டெல்லியில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் பாரிய காற்று மாசு ஏற்பட்டிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புகை மண்டலம் இந்தியத் தலைநகரை சூழ்ந்திருந்தது.

இதன் காரணமாக அங்கு பாடசாலைகள் மூடப்பட்டதுடன், கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையை இம்முறை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பொருட்டு பட்டாசுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியின் இந்த தடை உத்தரவைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றமும் பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது.

ஒரு புறத்தில் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசினைத் தடுக்கும் நடவடிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில், மறுபுறத்தில் இத்தகைய தடை உத்தரவுகளால் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்