துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம்

துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம்

துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம்

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2017 | 12:45 pm

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `அர்ஜுன் ரெட்டி’.

தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பால் இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

`அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எதிர்பார்பை அதிகரித்துள்ள இப்படம் துருவ் விக்ரம், பாலா என அடுத்தடுத்த தகவல்களால் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

மேலும் ஒவ்வொரு நாளும் இப்படம் குறித்த புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன, அந்த வகையில் துருவ் ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகி யார் என்பது குறித்து ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

`அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஷாலினி பாண்டே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஷ்ரியா சர்மா ஏற்கனவே `சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர். `

எந்திரன்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியிலும் ஷ்ரியா சர்மா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் அக்ஷரா ஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்