அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் தேலர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தெரிவு

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் தேலர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தெரிவு

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் தேலர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

10 Oct, 2017 | 4:32 pm

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார மேதை ரிச்சர்ட் தேலருக்கு, இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளியலுக்கும் உளவியலுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தெரிவிக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொருளியலுக்கும் உளவியலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி, மனிதர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக சிந்தனைகள், பொருளாதாரம் குறித்த அவர்களது முடிவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அதன் காரணமாக பொருளாதாரச் சந்தையில் ஏற்படும் பாதிப்புகளையும் தனது ஆய்வுகள் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் ரிச்சர்ட் தேலர்.

பொருளாதார விவகாரங்களில்கூட மனிதர்கள் உணர்வுகளுக்கு இடமளிப்பதால், அவர்களது பகுத்தறியும் திறன் குறிப்பிட்ட அளவே செயற்படும் என்பதையும், அதன் பின்விளைவுகள் குறித்தும் ரிச்சர்ட் தேலர் மிக ஆழமாக அலசி ஆராய்ந்துள்ளார்.

வெறும் சிந்தனைகளாக மட்டும் இல்லாமல் முழுமையான செயன்முறை ஆய்வுகள் மூலம் அவர் உருவாக்கியுள்ள கோட்பாடுகள், உளவியல் பொருளாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தனது ஆய்வுகள் மூலம் பொருளாதார விவகாரங்களில் ஒருவர் சரியான முடிவுகளை எடுக்கும் வகையில் தனது உணர்வுகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

நோபல் பரிசுடன் பரிசுத் தொகையான 90 இலட்சம் ஸ்வீடன் க்ரோனர்களும் ரிச்சர்ட் தேலருக்கு வழங்கப்படும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்