எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – அர்ஜூன ரணதுங்க

எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – அர்ஜூன ரணதுங்க

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2017 | 7:47 pm

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கேள்வி – தினேஷ் குணவர்தன:-

[quote]எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என பத்திரிகைகளில் செய்தி வௌியாகியுள்ளன. டீசல் மற்றும் பெற்றோலின் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதா?[/quote]

பதில் – அர்ஜூன ரணதுங்க:-

[quote]பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று வரை எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு எரிபொருட்களின் விலையை அதிகளவில் குறைத்தோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளமையினால் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் நான் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடுவேன். உலக சந்தையில் எரிபொருளின் விலை கூடிக்குறைவதனால் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் கடந்த சில வருடங்களாக கலந்துரையாடி வருகிறோம்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்