வெகுவாக அதிகரித்துள்ள தேங்காய் விலை: சிலரின் அசமந்தப் போக்கினால் அழிவடையும் தென்னை மரங்கள்

வெகுவாக அதிகரித்துள்ள தேங்காய் விலை: சிலரின் அசமந்தப் போக்கினால் அழிவடையும் தென்னை மரங்கள்

வெகுவாக அதிகரித்துள்ள தேங்காய் விலை: சிலரின் அசமந்தப் போக்கினால் அழிவடையும் தென்னை மரங்கள்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 8:44 pm

நாட்டில் தேங்காயின் விலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், தெங்கு செய்கை தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

எனினும், சிலரின் அசமந்தப் போக்கினால், அதிகளவிலான தென்னை மரங்கள் அழிவடைந்து செல்கின்றமை தொடர்பில் எமக்கு பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி – முட்கொம்பனில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பு தற்போது சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் பராமரிக்கப்படுகின்றது.

300 ஏக்கர் காணியிலுள்ள இந்தத் தென்னந்தோப்பு, முன்னர் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கிராமத்தவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கியதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தக் காணி சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டது.

எனினும், இந்த தென்னந்தோப்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தீ பரவியமையால் அதிகளவிலான தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

மக்களின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடம் நாம் வினவினோம்.

காடாக இருந்த சுமார் 100 ஏக்கர் தென்னந்தோட்டத்தை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் துப்பரவு செய்து தற்போது பராமரித்து வருவதாக திணைக்களத்தின் அதிகாரிகள் கூறினர்.

அண்மையில் நிலவிய வறட்சியின் போது தவறுதலாகவே தென்னந்தோட்டத்தில் தீ பரவியதாகவும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்