தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 1:54 pm

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பணத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா வை கடந்த நான்காம் திகதி கணக்கின் உரிமையாளர் மீளப் பெற்றுள்ளதுடன் மீண்டும் 8 மில்லியன் ரூபாவை கடந்த ஆறாம் திகதி மீளப் பெறுவதற்கு முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் பணத்தை மீளப் பெறுவதற்காக குறித்த வங்கிக்கு வந்த மற்றுமொருவரை கைது செய்வதற்காக வங்கியின் சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்