சுவிட்சர்லாந்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் பலி

சுவிட்சர்லாந்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் பலி

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 8:42 pm

சுவிட்சர்லாந்ந்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்த மேலும் இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களை கத்தியால் குத்துவதற்கு குறித்த நபர் முயற்சித்ததாக சுவிட்சர்லாந்து பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 38 வயதான புகலிடக் கோரிக்கையாளரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியம் கரன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து முகாம் ஒன்றில் வசித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்