அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 4:47 pm

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 10 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஜோய் மகேஸ்வரன் முன்னிலையில் இன்று பகல் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

காரைநகர் கோவிலன்துறை கடற்பிராந்தியத்தில் நேற்று (08) இரவு இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டதுடன், படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைதான மீனவர்கள் நாகை மற்றும் காரைக்குடியை சேர்ந்தவர்கள் என யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

இதேவேளை, கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 5 ஆம் திகதியும் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்