பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 22 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 22 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 22 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 4:06 pm

பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் – ஜால் மஸ்கி பகுதியில் உள்ள ஷியா மசூதியில் கடந்த 05 ஆம் திகதி தொழுகைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த ஒருவரை பொலிசார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அந்நபர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்துள்ளார்.

இதனால் அந்நபரும் அருகில் இருந்த 12 பேரும் உடல் சிதறி பலியாகினர்.

காயமடைந்த சுமார் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்