“தாட்” எனப்படும் நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சவுதிக்கு விற்கிறது அமெரிக்கா

“தாட்” எனப்படும் நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சவுதிக்கு விற்கிறது அமெரிக்கா

“தாட்” எனப்படும் நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சவுதிக்கு விற்கிறது அமெரிக்கா

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 5:25 pm

அமெரிக்காவின் நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான “அதிவுயர் பகுதி பாதுகாப்பு முனையம்” எனப்படும் “தாட்” (Thaad) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த 15 பில்லியன் டொலர் மதிப்புடைய வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை நலன்களை மேம்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வான்வெளி பாதுகாப்பு அமைப்புக்களை ரஷ்யாவில் இருந்து வாங்குவதற்கு சவுதி அரேபியா ஒப்புக்கொண்ட மறுநாள் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் அந்த பிராந்தியத்தில் காணப்படும் இராணுவ சமநிலையை மாற்றிவிடாது என்று அமெரிக்க முப்படைகளின் தலைமை அலுவலகமான பென்டகனின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவால் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை அளிப்பதற்காக அமெரிக்காவின் ‘தாட்’ ஏவுகணை அமைப்புகள் தென் கொரியாவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இதற்கு பல தென் கொரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு பொருத்தப்படும் இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகும் என்பதால் அதற்கு அருகில் வாழும் மக்களின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகும் என்ற அச்சத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென் கொரியாவில் தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை நிறுவது பிராந்திய பாதுகாப்பு சமநிலையை பாதிக்கும் என்று கூறி சீனாவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்