கோவாவில் நாக சைதன்யா – சமந்தா திருமணம்

கோவாவில் நாக சைதன்யா – சமந்தா திருமணம்

கோவாவில் நாக சைதன்யா – சமந்தா திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 4:31 pm

கோவாவில் நேற்று (06) நள்ளிரவு நாக சைதன்யா – சமந்தா திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ‘ஏம் மாய சேஸாவே’ படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர்.

அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அதன் பின்னர் இந்த ஜோடி, மேலும் 3 படங்களில் நடித்தனர். இதனால் இவர்களது காதல் வளர்ந்தது.
இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர்களது திருமணம் நேற்று நள்ளிரவு கோவாவில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்திற்கு சுமார் 170 பேர் மட்டுமே ஹைதராபாத்திலிருந்து தனி விமானத்தில் கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கோவாவில் பிரபலமான ‘டபிள்யூ’ எனும் நட்சத்திர ஹோட்டலில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.

விரைவில் ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக திருமண வரவேற்பு நடத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்