கோட்டாபய முகாம் காணி சுவீகரிப்பில் மர்மம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்தேகம்

கோட்டாபய முகாம் காணி சுவீகரிப்பில் மர்மம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்தேகம்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 9:35 pm

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சியின் பின்புலத்தில் ஏதேனும் மர்மங்கள் இருக்கலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வௌியாகிய வர்த்தமானியின் பிரகாரம், கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் வௌ்ள முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது.

காணி எடுத்தல் சட்டத்தின் கீழ் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிவித்தல் வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது.

ஒரு பகிரங்கத் தேவைக்காக காணி எடுத்தல் சட்டத்தின் பிரகாரம், காணி எடுத்துக்கொள்ளப்படுவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இந்த நடவடிக்கையில் சந்தேகம் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்