காத்தான்குடி வீடொன்றில் கொள்ளை: இளைஞர்கள் நால்வர் கைது

காத்தான்குடி வீடொன்றில் கொள்ளை: இளைஞர்கள் நால்வர் கைது

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 3:10 pm

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் வீடொன்றைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

60 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள், ஒரு இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் வௌிநாட்டு நாணயத்தாள்கள் சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 5 ஆம் திகதி கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்கள் நேற்று (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 20, 24, 26 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்