களுவாஞ்சிக்குடியில் இருவேறு பகுதிகளில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

களுவாஞ்சிக்குடியில் இருவேறு பகுதிகளில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

களுவாஞ்சிக்குடியில் இருவேறு பகுதிகளில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 3:30 pm

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் இருவேறு பகுதிகளில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடி பகுதியில் வசிக்கும் 27 வயதான தாயொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

6 வயது பிள்ளையின் தாய் ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனது பிள்ளையுடன் குறித்த பெண் தனியாக வீட்டில் வசித்து வந்ததுடன், பெண்ணின் கணவர் வௌிநாட்டில் இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, களுவாஞ்சிக்குடி பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி – ஒந்தாச்சிமடம் எல்லைப்பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாரின் அவசர அழைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுளது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்