கறுவாத்தோட்டத்தில் வைத்தியரைக் கடத்த முயன்ற ஐவர் கைது

கறுவாத்தோட்டத்தில் வைத்தியரைக் கடத்த முயன்ற ஐவர் கைது

கறுவாத்தோட்டத்தில் வைத்தியரைக் கடத்த முயன்ற ஐவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 3:19 pm

கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியில் வைத்தியர் ஒருவரைக் கடத்திச்சென்று கப்பம் கோர முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (05) குறித்த வைத்தியரைக் கடத்திச்சென்று, ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 3 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாணந்துறையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்